பிரபல ரவுடி குணா குண்டர் சட்டத்தில் கைது - ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு

பொது அமைதி மற்றும் பொது ஓழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி கருணாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் .;

Update: 2022-02-16 15:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி குணா என்கிற குணசேகரன். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து,  ஆட்கடத்தல்,  கொலை மிரட்டல்,  கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக இருந்த படப்பை குணா,  கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் அளித்த பரிந்துரையின் பேரில், பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ‌ கூறி,  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த கடிதம் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News