14 வயது பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை: வாலிபருக்கு காப்பு
14 வயது சிறுமிக்கு குழந்தை வரம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் சிறுமிக்கு கடந்த 8 ஆம் தேதி அதிகாலையில் திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
18 வயது பூர்த்தி அடையாததால் இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீ பெருமந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்,
வாக்குமூலத்தில் தான் சொந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிராமத்தில் படித்து வந்ததாகவும் , தனது ஊரைச் சேர்ந்த காமேஷ் வ/ 25 காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தொடர்ந்து 5.3.2021 இதிலிருந்து உடலுறவு வைத்துக் கொண்டதால் கர்ப்பமாகியதாகவும் .
பின்னர் யாருக்கும் தெரியாமல் 28.9.2021 அன்று மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்ததாக தெரிவித்தார் .
சிறுமியை தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.