வீடியோ கேமிற்கு அடிமையாகிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் செல் போனில் ஃப்ரீ பையர் கேமுக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-06-30 15:30 GMT

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சசிகுமார் வயது 21.  இவர் பிஎஸ்சி படித்த பட்டதாரி இளைஞர் ஆவார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து நண்பர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

சசிகுமார் செல் போனில் பிரீ பையர்கேமுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடுவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சசிகுமார் வேலைக்குச் செல்லாமல் அறையில் யாருமில்லாத சமயத்தில் சீலிங் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்பு அறையில் தங்கி இருந்த அவரது நண்பர்கள் வேலை முடிந்து அறைக்கு வந்து பார்த்த பொழுது சசிகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

உடனே அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஃப்ரீ பையர்கேமுக்கு அடிமையாகி பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News