காதலர்களை மிரட்டி ஜி-பே மூலம் பணம் பறித்த காவலர்கள் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரிடம் மணிமங்கலம் காவல்துறையை சேர்ந்த இருவர் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய போலீசார் இருவர் காதலர்களை மிரட்டி ஜி-பே மூலம் லஞ்சம் வாங்கியது நிருபிக்கபட்டதை அடுத்து கைது செய்யபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அடுத்த மணிமங்கலம் காவல் நிலையத்தில் அமிர்தராஜ், மணிபாரதி ஆகிய இருவரும் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது தனியாக நின்று கொண்டிருந்த காரில் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (30) மற்றும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அங்கு சென்ற காவலர்கள் இருவரும், அவர்களை மிரட்டும் தோணியில் பேசி முதலில் பத்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் நான்காயிரம் ரூபாய் தான் இருக்கிறது என்று அவர்கள் கூறியதால் அந்த பணத்தை ஜி-பே மூலம் லஞ்சமாக பெற்றுவிட்டு சென்றுள்ளனர்.
உடனடியாக கிருஷ்ணன் காவல் கட்டுபாட்டு அறைக்கு போலீசார் என்று கூறி வந்த இருவர் தங்களை மிரட்டி பணம் பறித்து சென்றதாக கூறியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனி தனிக்குழு அமைத்து இருவரையும் கைது செய்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து ரகசியமாக விசாரணை செய்ததில் ஜி-பே மூலம் லஞ்சமாக பணம் பெற்றது தெரியவந்து அது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிபதிமுன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காவல்துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில் அவர்களை மிரட்டி லஞ்சப் பணம் பெற்றதும் அதை விஞ்ஞான ரீதியாகப் பட்டதும் இதற்கு பெரும் கண்டனம் எழுந்து வருகிறது.
மேலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஸ்ரீபெரும்புதூரை சுற்றி அடிக்கடி போலியாக காவல் துறை அலுவலர்கள் எனக் கூறிக்கொண்டு வழிப்பறி நடப்பதும், சில குற்ற செயல்களை தொடர்ந்து நடத்தி வருவதாக வந்த புகார் குறித்து கடந்த ஒரு மாதமாகவே காவல்துறையினர் இதுபோன்ற ஆட்களை தேடி வந்த நிலையில் காவலர்களே தற்போது சிக்கி உள்ளது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.