வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

ஸ்ரீபெரும்புதூர் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது;

Update: 2021-10-10 02:00 GMT
வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில்  வைத்து சீல் வைப்பு

 தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில்  வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

  • whatsapp icon

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் நடைபெற்றது இதற்கென 601 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 39,465 ஆண் வாக்காளர்களும் 41,988 பெண் வாக்காளர்களும் என 81 ஆயிரத்து 553 பேர் மொத்தமாக வாக்களித்துள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு பதிவு நிறைவு பெற்ற வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவை அனைத்தும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு இறுதி சரிபார்ப்புக்கு பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News