நகராட்சி தேர்தல் : 4 கணவன் & மனைவி ஜோடிகள் வெற்றி

குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, சார்பாக போட்டியிட்ட கணவன்கள் மற்றும் மனைவிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.;

Update: 2022-02-23 00:30 GMT

குன்றத்தூர் நகராட்சியில் வெற்றி பெற்ற சத்யமூர்த்தி மற்றும் அவரது பானு சத்யமூர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று விடைபெற்றது. இதில் குன்றத்தூர் நகராட்சியில் திமுக சார்பில் 18ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியும், 17ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியின் மனைவி பானுசத்திமூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல் மாங்காடு நகராட்சியில், மதிமுக சார்பில் 9ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனும், 6ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனின் மனைவி சுமதியும் வெற்றி பெற்றனர்.  மாங்காடு நகராட்சியில் அதிமுக சார்பில் 12ஆவது வார்டில் போட்டியிட்ட ரூசேந்திரகுமாரும், 16ஆவது வார்டில் போட்டியிட்ட ரூசேந்திரகுமாரின் மனைவி வாணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், மாங்காடு நகராட்சியில் திமுக சார்பில் 25ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவும், 27ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவின் மனைவி யாஷ்மினும் வெற்றி பெற்றுள்ளனர். குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் மட்டும் 4 கணவன்களும் அவர்களது மனைவிகளும் வெற்றி பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags:    

Similar News