உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிப்ரவரி 12ஆம் தேதி உளுந்தூர்பேட்டைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் முன்னெடுப்பின் வாயிலாக தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது மூன்றாம் கட்ட சுற்றுப்பயண விபரங்களை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 12ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் உளுந்தூர்பேட்டை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உளுந்தூர்பேட்டை பகுதிக்கு வருகை தர உள்ளார். கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பொது மக்களை பெருமளவில் அழைத்து வந்து அவர்கள் கோரிக்கை மனுவை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.