சங்கராபுரம் அருகே இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சங்கராபுரம் அருகே கருக்கலைப்பு செய்து பெண் இறந்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்து பெண் இறந்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 22ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்கா, கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி க/பெ சின்னத்தம்பி என்பவருக்கு அதே ஊரில் உள்ள மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த போது அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த வழக்கில் மெடிக்கல் கடையின் உரிமையாளர் முத்துகுமாரி க/பெ மணிகண்டன் கீழ்பாடி கிராமம் மற்றும் கவிதா க/பெ அருண்குமார் அ.பாண்டலம் கிராமம் ஆகிய இருவரும் இரிஷிவந்தியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.