சங்கராபுரம் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள்
உலகலப்பாடி ஏரிக்கரையில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள் படர்ந்துள்ளதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவில் உள்ள வடபொன்பரப்பி அருகே உலகலப்பாடி ஏரிக்கரையில் அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை மற்றும் மின் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் வடபொன்பரப்பி கிராமத்தில் உள்ள மின் கம்பம் பழுதடைத்துள்ளது.
தற்போது மழைக்காலம் துவங்கவிருப்பதால், உயர் மின் அழுத்த கம்பியில் படர்ந்திருக்கும் செய்தி கொடிகளை அகற்ற வடபொன்பரப்பி மின் வாரிய பொறியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.