சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு
சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்த காவல்துறையினர்
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் எரி சாராயம் காய்ச்சி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது வனப்பகுதி அருகே உள்ள முருகன் என்பவருடைய விவசாய நிலத்தில் எரிசாராயம் காய்ச்சுவதற்கு நான்கு பேரல்களில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் தலைமறைவாகிய முருகன், ஐயப்பன் இருவரையும் தேடி வருகின்றனர்.