சங்கராபுரம் அருகே சாலைவிபத்தில் பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு
சங்கராபுரம் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் மோதி, பட்டதாரி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவு திருவண்ணாமலை செல்லும் வளைவு பகுதியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே பொறியியல் பட்டதாரி பன்னீர்செல்வம் என்பவர் உயிரிழந்தார்.
இறந்துபோன பன்னீர்செல்வம் உடல் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.