Kallakurichi News-இந்தியன் வங்கி பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்..!

கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியில், இந்தியன் வங்கிப் பணியாளர்களுக்கான சிறப்பு கண் மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-01-23 14:24 GMT

kallakurichi news-கண் பரிசோதனை (கோப்பு படம்)

Kallakurichi News

கள்ளக்குறிச்சி சஞ்சீவி மருத்துவமனை, நேரு கண் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவ மையம் சார்பில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். உதவி கிளை மேலாளர் கமலேஷ் வரவேற்றார்.

Kallakurichi News

இந்த கண் சிகிச்சை முகாம் நேரு கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் நேரு, டாக்டர் கீர்த்தனா, அகர்வால் கண் மருத்துவ மைய டாக்டர் ஜேக்கப், சஞ்சீவி மருத்துவமனை டாக்டர்கள் நந்தினி, ரமேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தலைமையில் இந்த முகாம் நடந்தது.

மருத்துவக்குழுவினர் கண்சிகிச்சை முகாமுக்கு வந்திருந்த வங்கிக் கிளைகளின் பணியாளர்களை பரிசோதனை செய்தனர்.

Kallakurichi News

கள்ளக்குறிச்சி, விளம்பார், கச்சிராயபாளையம், சூளாங்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், சின்னசேலம், ஆலத்துார் உள்ளிட்ட இந்தியன் வங்கியின் 23 கிளைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

பொதுவாக வங்கிப்பணியாளர்கள் தற்போது கணினியில் வெளியே செய்வதால் கண் பார்வையில் குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நேரம் கணினியில் வேலை பார்ப்பது கண் அயர்ச்சி, கண் பார்வைக்குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

அதை நிவர்த்தி செய்யும் விதமாக கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி, அதன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளைகளின் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தது.

Tags:    

Similar News