கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

Update: 2021-06-08 11:30 GMT

தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்

சின்னசேலம் அரசு மருத்துவமனையில் 22 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

திருக்கோவிலூர் அரசு மருத்துமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடு்க்கப்படும் என்றார்.

தொடர்ந்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட கொரானா வார்டை அமைச்சர்கள் திறந்துவைத்தனர். பின்னர் அவர்களிடம் சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புசார்பில் மருத்துவமனைக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 4 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி ஆகியவை வழங்கப்பட்டன. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் கிரன்குராலா, பொன்.கவுதமசிகாமணி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மருத்துவக்கல்லூரி டீன் உஷா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News