ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-11-11 10:15 GMT

ஈரோடு இளைஞர் காங்கிரஸ் கட்சி கூட்டம், கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற்றது. 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக,  இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் , இன்று காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு,  ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ரவி தலைமை வகித்தார்.

இதில், வரப்போகும் மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் லெனின் பிரசாத்,  கார்த்திக்,  செந்தூர் ராஜகோபால் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முகமது ரபிக்,  மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கல்கிக்கு உள்ளிட்டோருக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய  வேண்டும் என்று,  ஆலோசனை வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ், ராஜப்பா, புனிதன்,  விஜயபாஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News