உலக குளுக்கோமா வாரம்: கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

Update: 2022-03-11 07:15 GMT

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி,

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு   ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில்  விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் நந்தாஸ்கூல் ஆப்பிரசிங்கல்நாரி.வி.இ.டி கலைமற்றம் அறிவியல்கல்லூரி( இருபாலர் மாணவ, மாணவியர்கள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி இஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை ஈரோடுமேயர் திருமதிநாகரத்தினம்சுப்பிரமணியம்  தொடங்கிவைத்தார்.

இது குறித்து ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜய்குமார் கூறியதாவது:  2013 ஆம் ஆண்டில் உலகளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.3 மில்லியனாக  இருக்கும்  என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் 800 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. 2040 இல் 1118 மில்லியனாகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்தநோயால் பாதிக்கப்பட்ட 90% இந்நோய்பற்றி தெரிவதில்லை.

ஆரம்ப நிலையில் இந்நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை பறிபோவதை தடுக்கலாம் இந்தநோயால் 40வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் 40வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம், சேலம் பவுண்டேஷன் கண் மருத்துவமனை பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என்றார்.

இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி ஈரோடு   தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அபிராமசுந்தரி சந்திராஜேஸ்வரி ரோமித், மேனேஜர் கிஷோர்,.மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்தசாமி.பாபு மற்றுமதி ஐ பவுண்டேஷன்  கண்மருத்துவமனை ஊழியர்கள் நந்தா ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூாரி, வேளாளர் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள்  250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News