நலவாரியத்தில் பதிவு செய்ய பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு!
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஈரோடு: தமிழகத்தில், 19 நலவாரியங்கள் செயல்படுகிறது. இதில், பெண்கள், திருநங்கை ஓட்டுனர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.
உறுப்பினர் நன்மைகள்
- ஆட்டோ வாங்குவதற்கு மானியம்
- திருமண நிதியுதவி
- மகப்பேறு நிதியுதவி
- இரு குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி
உறுப்பினர் பதிவு முகாம்
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் முகாம், ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெறுகிறது. இப்பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை.
உறுப்பினர் பதிவுக்கு தேவையான ஆவணங்கள்
ஆதார் எண் - கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
அசல் ஆதார் அட்டை - கட்டாயம்
அசல் ரேஷன் கார்டு - கட்டாயம்
பாஸ்போர்ட் அளவு போட்டோ - கட்டாயம்
வங்கி கணக்கு புத்தகம் - கட்டாயம்
வயதுக்கான ஆவணம் - கட்டாயம்
ஆன்லைன் பதிவு
www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நலவாரிய அட்டையை உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு
கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2275591, 2275592 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
புதிய ஆட்டோ, டாக்ஸி வாங்குவதற்கு ஆகும் செலவில், மானியமாக தலா, 1 லட்சம் ரூபாய், 1,000 பெண்கள், திருநங்கை ஓட்டுனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி, சுய தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்கலாம்.