கடம்பூர் அருகே ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் பீதி ..!
கடம்பூர் அருகே ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.;
கடம்பூர் அருகே ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி சுற்றித் திரிவது வழக்கம்
இரவு நேரங்களில் யானைகள் உணவு தண்ணீர் தேடி சுற்றித் திரிவது வழக்கம். இந்த நிலையில் ஆசனூர் வனக்கோட்டம், கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட தேன்பாறை என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த யானை முகாமிட்டுள்ளது.
விவசாயி ஒருவரை யானை தாக்கி உயிரிழப்பு
இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதியில் காட்டுப்பகுதியை விவசாயி ஒருவரை முதலில் மறைந்திருந்து யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிராம மக்கள் பீதி
தற்போது அதே பகுதியில் யானை முகாமிட்டு சுற்றி வருவதால் அப்பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.