ஈரோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்ற இருவர் கைது..!
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.;
மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட வெங்கடாசலம் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பெட்டிக்கடையில் புகையிலை பொருள்கள் கண்டுபிடிப்பு
ஈரோடு டவுன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் அங்கு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கடை உரிமையாளர் கைது
உடனடியாக கிருஷ்ணம்பாளையம் ரோடை சேர்ந்த கடை உரிமையாளரான கணேசன் (50) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 847 கிராம் எடையுள்ள பான் மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மற்றொரு கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதேபோல பங்களாபுதூர் போலீசார் அண்ணா நகர் அரசு பள்ளி அருகில் அமைந்துள்ள மற்றொரு பெட்டிக் கடையிலும் சோதனை நடத்தியபோது, அங்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இரண்டாவது கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை
அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (44) என்பவர் மீதும் பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 275 கிராம் எடையிலான பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து கண்காணிப்பு
மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை தொடர்பான சோதனைகளை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இத்தகைய நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.