திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீண்ட கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.;
நீண்ட கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. தமிழகம், கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சரக்கு போக்குவரத்து லாரிகள் அதிகளவில் செல்கின்றன
குறிப்பாக சரக்கு போக்குவரத்து லாரிகள் அதிகளவில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவையும் திரும்பிச் செல்வது வாகன ஓட்டிகளுக்கு சவால் ஆனதாகவும்.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பழுது
சமீப காலமாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்று விடுவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
2-3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
கிட்டத்தட்ட இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
இன்று விடுமுறை நாள் என்பதால் காலை 6 மணி முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் திம்பம் மலைப்பகுதிக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.ஒரே நேரத்தில் வாகனங்கள் சென்றதால் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.