100 நாள் வேலை தொழிலாளர்களின் நியாயமான போராட்டம்

100 நாள் வேலை கூலி தொகை வழங்கப்படும் வரை வேலை செய்யாமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்;

Update: 2025-04-03 09:40 GMT

கூலி பாக்கி தரும் வரை போராட்டம் – 100 நாள் தொழிலாளர்கள் உறுதி

சத்தியமங்கலம்: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள கூலி தொகை வழங்கப்படும் வரை வேலை செய்யாமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், சத்தியமங்கலம் சங்க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹4,034 கோடி பாக்கி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News