வயிற்றில் அக்னிச்சட்டி வைத்து கோவிலை வலம் வந்த பூசாரி
கோவில் பூசாரி தனது வயிற்றில் அக்னிச்சட்டி வைத்துக்கொண்டு, முழு பக்தியுடன் கோவிலை வலம் வந்தார்;
வயிற்றில் அக்னிச்சட்டி வைத்து கோவிலை வலம் வந்த பூசாரி
அந்தியூர் அருகே எண்ணமங்கலம் விராலிக்காட்டூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் சிறப்பாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கான முன்னேற்பாடுகள் 15 நாட்களுக்கு முன்பே பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
இன்று (செவ்வாய்) கோவிலில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கோவில் முன்பு திரம்பம் நடப்பட்டு, அதன் மீது ஒரு பெரிய சட்டி வைத்து தீ மூட்டப்பட்டது. அதனை கோவில் பூசாரி தனது வயிற்றில் வைத்துக்கொண்டு, முழு பக்தியுடன் கோவிலை வலம் வந்தார்.
அவருடன் மேளக்காரர் ஒருவரும், மத்தளத்தை வயிற்றில் வைத்தபடி அவருடன் சுற்றி வந்தார். ஆண்டுதோறும் இவ்வகை வினோத நேர்த்திக்கடனை பூசாரியும், மத்தள வாசிப்பவரும் தொடர்ந்து செய்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.