கொப்பரையின் விலை புதிய உச்சத்தை எட்டியது

கொப்பரையின் விலை இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ கொப்பரை ₹187.18 எனப் புதிய விலையுடன் ஏலத்திற்கு சென்றுள்ளது;

Update: 2025-04-04 09:00 GMT

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொப்பரை விலைப் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, கொடுமுடி உள்ளிட்ட விற்பனை மையங்கள் மற்றும் வெள்ளகோவில், காங்கேயம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மண்டிகளில் கொப்பரைக்கு உள்ள விலை மிகையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ கொப்பரை ₹187.18 எனப் புதிய விலையுடன் ஏலத்திற்கு சென்றுள்ளது.

கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் தெரிவித்ததாவது, 2018ஆம் ஆண்டு முதல் முறையாக கொப்பரை விலை ₹147-ஐ எட்டியது. ஆனால் தற்போது, விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்து, பெருந்துறையில் கிலோக்கு ₹154 முதல் ₹187.18 வரை முதல்தர கொப்பரை ஏலத்தில் விற்பனையானது. இரண்டாம் தரம் ₹132 முதல் ₹182.49 வரை விற்கப்பட்டது. அதேபோல், மொடக்குறிச்சி உப விற்பனை மையத்தில், முதல்தரம் கொப்பரை கிலோ ₹172.60 முதல் ₹181.99 வரை விற்பனையானது என்றனர்.

இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், சில்லறை சந்தையில் நுகர்வோர்களுக்கு ஒரு சவாலாக மாறும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News