சென்னிமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில்,பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது;

Update: 2025-04-02 04:40 GMT

சென்னிமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழா – ஏப்.9 முதல் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தலமான சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில், ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறும். அதன் பின்னர், 11 ஆம் தேதி அதிகாலை தேர்வடம் பிடித்தல் நடைபெறவுள்ளது. இதே நாளில் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழா குழுவின் சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5:00 மணிக்கு தேர்நிலை சேரும்.

அடுத்ததாக, ஏப்ரல் 12 ஆம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும், அதற்குப் பிறகு இரவு தெப்பத்தேரில் சிறப்பு உற்சவம் நடைபெறும். திருவிழாவின் இறுதிநாளான ஏப்ரல் 13 ஆம் தேதி காலை மகாதரிசனம் நடைபெற்றுக், இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நிறைவு பெறும்.

இந்த புனித திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, சுப்பிரமணிய சுவாமியின் அருளைப் பெறும் வாய்ப்பை பெறலாம்.

Tags:    

Similar News