ஜன. 2 அன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அதிகரிப்பு
பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது
அரையாண்டு விடுமுறை: மாணவர்கள் புத்துணர்வு பயணத்திற்கு தயார்
அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.
பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும்போது, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவப் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி பெற்றோர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும், உறவினர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்று மாலை முதல் பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.