போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கை

அரசு போக்குவரத்து கழக பணியாளர் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது;

Update: 2025-04-02 09:50 GMT

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்த  போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கருத்து

ஈரோடு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை மண்டலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஈரோடு மண்டல தலைவர் கலைமுருகன் தலைமையில செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். திருப்பூர் மண்டல தலைவர் இன்பசேகரன், சம்பத்குமார், உத்திரராஜன், பொன்னுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பின்னர், சம்மேளன மாநில பொது செயலாளர் பத்மநாபன் நிருபர்களிடம் பேசியதாவது, அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை 2023 மே மாதமே நடத்தப்படவேண்டியது. ஆனால், இன்னும் அது துவங்கப்படாதது வேதனைக்குரியது. தொழிற்சங்க தேர்தல் மற்றும் அங்கீகார தேர்தலை நடத்தி அதன் பின்னர் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அது நிறைவேற்றப்படாமல் உள்ளதுதான் கவலையளிக்கிறது  என்றார்.

Tags:    

Similar News