அரசுப் பள்ளியில் திருவிழா போல் ஆண்டு விழா
7 ஆண்டுகள் கழித்து முதல் முறை அரசு பள்ளியில் ஆண்டு விழா உற்சாகம்;
37 ஆண்டுகளில் முதல் முறை அரசு பள்ளியில் ஆண்டு விழா உற்சாகம்
பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியனூர் அரசு ஆரம்ப பள்ளி நிறுவப்பட்டு 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நடக்காத ஒரு முக்கிய நிகழ்வாக, முதல் முறையாக ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவில், துடுப்பதி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கவிதா அன்பரசு தலைமை ஏற்றார். பெருந்துறை வட்டார கல்வி அலுவலர் தனபாக்கியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரி எப்சிபாய் அனைவரையும் உற்சாகமாக வரவேற்றார்.
இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலையொளி பறைசாற்றும் வகையில் அவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.