ஊராட்சி மன்ற அலுவலகம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்து: சுவர் விழுந்து தொழிலாளி பலி..!

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடிக்கும் போது சுவர் விழுந்து கூலி தொழிலாளி கடம்பூர் மாக்கம் பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன் (வயது 45) என்பவர் உயிர் இழந்தார்.

Update: 2024-12-28 11:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டிடம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கேர்மாளம் ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு

இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை ஆட்கள் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்.

கூலி தொழிலாளி சிக்குமாதன் கட்டிடத்துக்குள் சென்ற சம்பவம்

அப்பொழுது கூலி தொழிலாளி கடம்பூர் மாக்கம் பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன் (வயது 45) என்பவர் கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார்.

சுவர் இடிந்து விழுந்ததில் சிக்குமாதன் பலத்த காயம்

அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சிக்குமாதனை அங்கிருந்தவர்கள் கேர்மாளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிக்குமாதன் இறந்தது உறுதி

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கூலிதொழிலாளி சிக்குமாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News