ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் டாஸ்மாக் கடை நேரம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஈரோட்டில் டாஸ்மாக் கடை நேரம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் , டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10வரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் பழைய நேரப்படி விற்பனை செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், டாஸ்மாக் கடைகளுக்கு. லாக்கர் வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.