ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜை

கார்த்திகை 1 ம் தேதியை முன்னிட்டு ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2021-11-17 09:15 GMT

ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் மாலை அணிந்து கொள்ளும் பக்தர்.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஐய்யப்பனை  தரிசனம் செய்ய செல்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து ஐய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கார்த்திகை 1-ம் தேதியான இன்று அதிகாலையிலேயே ஐய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் உள்ள கோயிலில் துளசிமணி மாலை அணிந்து இன்று விரதத்தை தொடங்கினார்கள். இதற்காக காலை 6 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News