ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை - பரபரப்பு

ஆப்பக்கூடல் அருகே அடுத்தடுத்து மூன்று கோவில்கள் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-10 04:15 GMT

ஒரிச்சேரிப்புதூர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதூர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது, இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் திறக்க சென்ற பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்; இதுபற்றி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இதையடுத்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே அதே பகுதியில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு உள்ளது, இரண்டு கோவில் உண்டியலில் 1லட்சம் ரூபாய் காணிக்கை இருக்ககூடும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


மேலும் ஒரிச்சேரி பகுதியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள,  பத்தரகாளியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலில் கொள்ளை முயற்சியும் நிகழ்ந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம் குறித்து,  மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக,  ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் இச்சம்பவம் நிகழ்ந்து இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமரா அப்பகுதியில் இல்லாததால் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் விரல்ரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரிக்க தடயவியல் நிபுணர்களை போலீசார் வரவழைத்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News