ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'ரேடார் 25' நிகழ்ச்சி!
ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'ரேடார் 25' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.;
ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'ரேடார் 25' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்டி கல்விக் குழுமங்களின் நிறுவனத்தலைவர் டாக்டர் செந்தில்குமார், செயலாளர் ராதா செந்தில்குமார் மற்றும் கல்லூரி தலைவர் ராகுல், சிஇஓ கீர்த்தனா ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ஆண்டறிக்கை வாசிப்பு
கல்லூரி முதல்வர் முனைவர் கே. வீரக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
பாரதியார் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு விருதுகள்
பாரதியார் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம்பிடித்த மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கி ஆர்டி கல்விக் குழுமங்களின் நிறுவனத்தலைவர் கவுரவித்தார்.ஆர்டி கல்லூரியின் அகாடமிக் டைரக்டர் காயத்ரி, விழாவை ஒருங்கிணைத்தார்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலாமாண்டு ஏஐடீஎஸ் மாணவர் வரவேற்பு
முன்னதாக முதலாமாண்டு ஏஐடீஎஸ் மாணவர் ஆர். சபினாஸ் வரவேற்றார்.மாணவ, மாணவியர், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.