வெள்ளகோவிலை தாலுகாவாக அறிவிக்க முன்மொழிவு..! பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு

வெள்ளகோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க முன்மொழிவு தயாராகி வருகிறது. இதுகுறித்து மக்கள் தங்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2025-01-11 05:14 GMT

காங்கேயம்: வெள்ளகோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க முன்மொழிவு தயாராகி வருகிறது. இதுகுறித்து மக்கள் தங்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு அறிவிப்பு

இதுகுறித்து வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த, 16 வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காங்கேயம் தாலுாகாவில் உள்ள வெள்ளகோவில் உள்வட்டத்தை இரண்டாக பிரித்தும், தாராபுரம் வட்டத்திலிருந்து கன்னிவாடி உள்வட்ட, சங்கரண்டாம்பாளையம் உள்வட்டத்திலிருந்து மாம்பாடி, புங்கதுரை கிராமங்களை இணைத்தும், வெள்ளகோவில் தாலுாக்கா உருவாக்கும் பொருட்டு, அதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளகோவில் உள்ள வட்டம், முத்தூர் உள் வட்டம் என பிரிக்கப்பட உள்ளது

வெள்ளகோவில் வட்டம் 

  • வெள்ளகோவில்
  • சேனாபதிபாளையம்
  • பச்சாபாளையம்
  • உத்தமபாளையம்
  • கம்பளியம்பட்டி
  • இலக்கமநாயக்கன்பட்டி

முத்தூர் உள் வட்டம்

  • முத்துார்
  • சின்னமுத்தூர்
  • உடையம்
  • ராசாத்தாவலசு
  • வேலம்பாளையம்
  • மங்கலப்பட்டி
  • பூமாண்டன்வலசு
  • மேட்டுப்பாளையம்
  • வள்ளியரச்சல்
  • வீரசோழபுரம்

மக்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்

இந்த தகவலை அந்தந்த கிராமங்களில் தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆட்சேபனை இருப்பின் தாராபுரம் சப்-கலெக்டர், காங்கேயம் தாசில்தாரிடம் நேரில் அல்லது தபாலில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News