அம்மாபேட்டை பேரூராட்சி உடன் படவல்கால்வாய் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் !
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி உடன் படவல்கால்வாய் ஊராட்சியை இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி உடன் படவல்கால்வாய் ஊராட்சியை இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கம்பேட்டை கேட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட படவல்கால்வாய் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் ஒன்றுதிரண்டு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அந்தியூர் பூதபாடி செல்லும் வாகனங்களும், தோப்பூர் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.