செல்போன் திருடனை மடக்கிப்பிடித்த சத்தியமங்கலம் பொதுமக்கள்!

சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் செல்போனை திருடி சென்ற நபரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.

Update: 2024-12-28 12:45 GMT

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காட்சியளிக்கும்.

பஸ் வந்தது

இந்நிலையில் நேற்று மாலை வெளியூரிலிருந்து சத்தியமங்கலம் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சில் ராசிப்பகவுண்டன் புதூரிலிருந்து பன்னீர்செல்வம் என்பவர் ஏறி சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருட்டு

அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் பன்னீர்செல்வம் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை திடீரென திருடிக் கொண்டு ஓடினார்.

தர்ம அடி

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் திருடன் திருடன் என கத்தினார். இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

போலீஸார் விசாரணை

இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்த போலீசார் திருடனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் உதவியுடன் செல்போன் திருடப்பட்டவருக்கு மீட்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News