ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2025-02-22 06:30 GMT

ஈரோடு : ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பின் தலைவா் கண.குறிஞ்சி தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழா் பேரவையின் நிறுவன தலைவா் அதியமான், திராவிடா் கழக துணைப் பொதுச்செயலாளா் மதிவதனி ஆகியோா் பேசினா்.

இதில், புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கான கல்வித் தொகையை வழங்க மறுப்பதை கண்டித்தும், யுஜிசி விதிகளை திருத்தி ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திராவிடா் கழக மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், திராவிடா் விடுதலை கழக மாநில அமைப்பு செயலாளா் ரத்தினசாமி, நீரோடை அமைப்பு தலைவா் நிலவன், தமிழ்புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளா் சிந்தனை செல்வன், தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News