ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் செலுத்த ஆரம்பம்!

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.;

Update: 2025-01-23 06:15 GMT

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இதனிடையே வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதில் மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


தீவிர பிரசாரம்

இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு

இடைத்தேர்தலில் தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News