மருத்துவ ஊழியர் வீட்டில் மர்ம கொள்ளை

பெருந்துறையில், மருத்துவ ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை காரணமாக சிடிவி கேமரா பதிவுகள் சோதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்;

Update: 2025-04-04 10:20 GMT

பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி அன்பு நகரைச் சேர்ந்த சந்திரமோகன் (44) மற்றும் அவரது மனைவி கவிதா (42) இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள். வழக்கம்போல் நேற்று காலை, தம்பதியரும் வேலைக்காக வெளியேறி, மகனும் கல்லூரிக்கும், மகளும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.

மாலை வேளையில் சந்திரமோகன் வேலை முடித்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன்னிலை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்வையிட்ட போது, பீரோவில் வைத்திருந்த ரூ.20,000 ரொக்கம், இரண்டரை பவுன் நெக்லஸ் மற்றும் கால் பவுன் தோடு ஆகியவை மர்ம நபர்களால் திருடப்படப்பட்டிருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News