ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 60 குண்டுகள் முழங்க காவலர் நினைவு அஞ்சலி

உயிர் நீத்த காவலர்களுக்கு ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-10-21 08:30 GMT

வீரவணக்கம் நாளில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர், எஸ்பி மற்றும் காவலர்கள்.

காவல்துறையில் உயிர்நீத்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உயிர் நீத்த அதிகாரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்பி., சசிமோகன் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த அதிகாரிகளுக்கு 20 குண்டுகள் வீதம், மூன்று முறை 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றில் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்பி., சசிமோகன் ஆகியோர் கேடயம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ., பிரேமலதா, ஏடிஎஸ்பி.,கள் பாலாஜி, கனகேஸ்வரி, ஈரோடு டவுன் டிஎஸ்பி., ஆனந்தகுமார், ஏஎஸ்பி., கௌதம் கோபால், ஆயுதப்படை ஏடிஎஸ்பி., ராஜ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News