உரிமம் இன்றி பட்டாசு தயாரிப்பு
எலத்தூரில், உரிமம் இல்லாமல் வெடிபொருள் தயாரித்த தம்பதி மீது போலீஸ்சார் வழக்கு;
உரிமம் இன்றி பட்டாசு தயாரிப்பு தம்பதி மீது போலீஸ் வழக்கு
நம்பியூரை அடுத்த எலத்தூரை சேர்ந்த பழனிச்சாமி (52) மற்றும் அவரது மனைவி ருக்குமணி, செட்டியாம்பதி கிராமத்தில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளை தயாரித்து வந்தனர். 2019 ஆம் ஆண்டில் அரசு உரிமம் பெற்று இவ்வியாபாரத்தை ஆரம்பித்த இவர்களுக்கு, 2022ல் உரிமத்தை புதுப்பிக்காத நிலை ஏற்பட்டது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் உரிமம் இன்றி பட்டாசு தயாரித்து வருகின்றனர் என்ற புகார் நம்பியூர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, மத்தாப்பு உள்ளிட்ட வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பழனிச்சாமி, ருக்குமணி தம்பதியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.