மது போதையில் பட்டறை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கும்பல்
ஈரோட்டில், பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் போலீஸ்சாரால் கைது செய்யபட்டனர்;
கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கும்பல் கைது
ஈரோடு: ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (29) மற்றும் அவரது சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் சூளை பகுதியில் இணைந்து கார் பட்டறை நடத்தி வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி, பட்டறை முன்பாக இருவர் அமர்ந்து மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டித்த சகோதரர்களுடன் முறையிட்ட அவர்கள், சிறிது நேரத்தில் தங்களது கூட்டாளிகளை அழைத்து வந்து, பட்டறைக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும், கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (25), அரவிந்தன் (20), வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (30), ராஜேஷ் (25), சந்தோஷ் (20), சரத்குமார் (24) ஆகிய ஆறு பேரும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.