மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

பவானி அருகே , மூன்று வாகனங்களும் நேருக்கு நேர் மோதி சேதமடைந்த நிலையில் இருந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2025-04-04 06:40 GMT

பவானி அருகே மூன்று வாகனங்கள் மோதல் – இரண்டு டிரைவர்கள் படுகாயம்

பவானி நோக்கி மேட்டூரிலிருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி, நேற்று காலை சிங்கம்பேட்டையை அடுத்த சொட்டையனூர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. லாரியை மேட்டூர், மூலக்காட்டை சேர்ந்த ஜானகிராமன் (44) ஓட்டிச் சென்றார்.

அப்போது, பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் லாரியை முந்த முயன்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், லாரியின் பக்கவாட்டில் மோதி, எதிரே வந்த வாழைத்தார் ஏற்றி வந்த பிக்-அப் வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், டாடா ஏஸ் டிரைவரான போரூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (45) மற்றும் வேன் டிரைவரான சென்னம்பட்டி, ஜரத்தலையைச் சேர்ந்த சிவசங்கர் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாம்பல் லாரி டிரைவரான ஜானகிராமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மூன்று வாகனங்களும் பெரிதும் சேதமடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News