சென்னிமலை: பிடாரியூர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சென்னிமலை அருகேயுள்ள பிடாரியூர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது

Update: 2023-08-17 05:48 GMT

 பிடாரியூர் மாரியம்மன் 

சென்னிமலை, பிடாரியூரில் உள்ள மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பவானி கூடுதுறை சென்று ஆயிரக்கணக் கான பொதுமக்கள் தீர்த்தக் குடங்க ளுடன் பிடாரியூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாரியம்மன் கோயிலை அடைந்தனர்.

ஆக.16 ம் தேதி புதன்கிழமை காலை 7 மணியளவில் விநாயகர் வழிபாடு, மகாகணபதி ஹோமம், தீபாராதனை ஆகியவற்றுடன் விழா துவங்கியது. இரவு விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று ஆக.17 வியாழன் காலை 8 மணியளவில் விநாயகர் வழிபாடு, நவக்கிரஹ யாகம்ஆகியவை நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் விநாயகர் வழிபாடு, ப்ரவேச பலி பூஜை, ரக்ஷோக்ன யாகம், வாஸ்து சாந்தி ஆகியவையும் நடைபெறுகிறது.

நாளை ஆக.18 வெள்ளியன்று காலை 8 மணி அளவில் சாந்திஹோமம், கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், மாலை 5 மணி அளவில் முளைப் பாலிகை பூஜை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

19 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஆக.20ம் தேதி ஞாயிறன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம் ஆகியவையும், அன்று காலை 6.30 மணி அளவில் கலசங்கள் புறப்பாடும், காலை 7 மணியளவில் அருள்மிகு மாரியம்மன் விமான மஹா கும்பாபிஷேகம், அருள்மிகு விநாயகர், மாரியம்மன் மூலாலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News