சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டு சேகரிக்கும் வேலையில் தீவிரம் காட்ட வேண்டும் என பெருந்துறையில் அமைச்சர் கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் பாஜக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி பேசினார். அவர் பேசும்போது எதிர்கட்சியினர் விடியலை நோக்கி என்கிறார்கள். இதுவரை இருட்டில் தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்றுமே விடியாது. வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் போட்டது போதும். அடுத்தகட்டமாக ஓட்டு சேகரிக்கும் வேலையில் தீவிரம் காட்டவேண்டும்.
ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் ஓட்டுகளில் கவனம் செலுத்தவேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் கன குடிநீர் மேம்பாட்டு பணிகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்கவேண்டும். கொங்கு மன்டலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயக்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.