சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீர், வெளியேற்றிய தொழிற்சாலைக்கு சீல்

பெருந்துறையில் சுத்திகரிப்பு செயயாமல் கழிவுநீர் வெளியேற்றிய தோல் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கவும் தொழிற்சாலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-04-30 01:30 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பெருந்துறை தோல் தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது சுதிகரிப்பு செய்யாமல் அருகிலுள்ள குளத்தில் வெளியேற்றப்படுவதாக சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்துறையல் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் அருகிலுள்ள குளத்தில் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையை தமிழக மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுப்பப்ட்டது. இந்நிலையில் சுத்திகரிப்பு செயயாமல் கழிவுநீர் வெளியேற்றிய தோல் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கவும் தொழிற்சாலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News