நான் அறிவித்தப்படி இன்று முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்: முதல்வர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அப்போது நான் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்தப்படி இன்று முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை கடப்பமடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,
ஈரோடு மாவட்டம் என்று சொன்னாலே அதிமுகவின் கோட்டை என்றும் 2016 தேர்தலேயிலே 8 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி இந்த முறை எக்கு கோட்டையாக விளங்க வேண்டும் என்றார்.
வரும் தேர்தலிலேயே எதிரியை விழுத்தி கோட்டையிலேயே கொடி பறக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை அல்ல என பொய் பரப்புரையில் ஈடுபடுகிறார் என்றும் கொங்கு மண்டலம் என்றைக்கும் விநிஸி , அம்மாவின் கோட்ணை என்றார்.
எத்தனை அவதாரம் எடுத்தாலும் கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற முடியாது என்றும் ஸ்டாலின் கனவு பலிக்காது என்றும் அதிமுகவை விழத்த எத்தனையே அவதாரம் எடுத்ததை அனைத்தையும் முறியடித்தோம் என்றார்.
சட்டமன்றத்தில் மெஜார்ட்டியை நிருபிக்க முயன்ற போது சட்டமன்றத்தில் டான்ஸ் ஆடி , அராஜத்தை அறங்கேற்றினார்கள் , சட்டமன்றத்திலேயே இவ்வளவு அராஜகம் என்றால் நாட்டை அவர்கள் கையில் கொடுத்தால் என்ன ஆவது என்றும் சட்டமன்றத்திலேயே முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதாவை பெண் என்றும் பராமல் தாக்கினார்கள் ,
பின்னர் எப்படி திமுக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக ஒரு அராஜக கட்சி என்றும் ஆ.ராசா அவதூறாக , பெண்களை இழிவுப்படுத்தி , மோசமாக பேசிகிறார்.இவர்களை கண்டித்தாரா ஸ்டாலின் , திரணியில்லாத தலைவர் ஸ்டாலின் என்று குற்றம் சாட்டினார்.
திட்டமிட்டு பெண்களை, தலைவர்களை தரக்குறைவாக திமுகவினர் பேசி வருவதாகவும், இவர்களிடம் ஆட்சி கொடுத்தால் தமிழ்நாடு தாங்காது என்றார்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் , அதிமுக தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றார்.
இனி மனு வாங்கி குறைகள் தீர்க்கப்படாது என்றும் எளிமையான முறையில் 1100 என்ற எண்ணுக்கு போன் செய்து முதலைமச்சர் குறைதீர்க்கும் மையம் மூலம் தீர்வு காணலாம் என்றார். அதிமுக ஆட்சி மீது ஊழல் செல்லும் ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவதாத்திற்கு வர தயாரா ,
விவாத்த்தை பார்த்து மக்கள் பார்த்து தீர்ப்பு வழங்கட்டும் என்றும், அதிமுக அரசு மீண்டும் வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்த முதல்வர், ஈரோடு மாவட்டத்திற்கு செய்த பணிகளை பட்டியிலிட்டார்.
மேலும் 2047 கோடி ரூபாய் விவசாயிக்கு வறட்சி நிவாரண தொகை, 4 ஆண்டுகளில் 9300 கோடி ரூபாய் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கியது , 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் மோது அறிவித்தப்படி இன்று முதல் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார். ஸ்டாலின் முதல்வரானால் அவர் கேட்டை கூட பொதுமக்கள் தொட முடியாது என்றும் ஆனால் என் வீட்டு கதவு எப்போதும் திறந்து இருக்கும் , நான் முதல்வரானல் உங்கள் குடும்பத்தில் ஒருவர் முதல்வர் ஆனது போல் என்றும் குறிப்பிட்டார்.