சென்னிமலையின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னிமலையின் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை தீரும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2021-11-12 14:15 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னிமலை பேரூராட்சி மற்றும் பத்து ஊராட்சிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் வரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாத வகையில் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய குடிநீர் திட்டம் நிறைவு பெற்ற பின் இப்பகுதியில் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர்  பிரச்சனை இருக்காது என்றார். மேலும் இதுபோன்று ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News