பெருந்துறை திங்களுர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

பெருந்துறை திங்களுர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-09 13:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை திங்களுர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 11ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி,  பெருந்துறை கோட்டத்தை சார்ந்த திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, நல்லாம்பட்டி, மேட்டூர், பாப்பம்பாளையம், சுப்பையன்பாளையம், சுங்ககாரன்பாளையம்,சீனாபுரம் ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம்,தாண்டாகவுண்டண்பாளையம், மேற்கு பகுதி மட்டும், தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், ராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, கீழேரிபாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர்காலனி, மடத்துப்பாளையம், கோமையன்வலசு, வேலாங்காடு, மானூர்காடு மற்றும் மம்முட்டிதோப்பு ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News