பெருந்துறையில், ரூ. 1.97 கோடிக்கு கொப்பரை தேங்காய் விற்பனை
Today erode news in tamil- பெருந்துறையில், ரூ. 1.97 கோடிக்கு கொப்பரை தேங்காய் விற்பனை நடந்தது.
Today erode news in tamil- கொப்பரை என்பது தேங்காயை நங்கு உலரவைத்த பின் கிடைக்கும் ஒரு பொருள் ஆகும் . தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர்.
தேங்காய் எண்ணெய் எடுப்பதற்குக் கொப்பரை பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதைக் கொப்பரை ஆக்குவர். இது பல தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான விவசாய பொருளாக அமைகிறது. இதில் எண்ணெயை பிரித்தெடுத்த பிறகு தேங்காய்க் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு. தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 212 மூட்டைகளில் 2 லட்சத்து 53 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
அதில் முதல் தரக் கொப்பரை தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ.75.69-க்கும், அதிக பட்சமாக ரூ.83.29-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை தேங்காய் குறைந்தபட்சமாக, ரூ.41-க்கும், அதிகபட்சமாக ரூ.78-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1.97 கோடிக்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது.
நிலக்கடலை ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.62.39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் விற்பனையானது. நிலக்கடலைக்காய் மொத்தம் ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்து 14-க்கு விற்பனையானது.