கருத்து கேட்பு கூட்டத்தில் வெளிமாநில செய்தியாளர்கள் புகுந்ததால் ரகளை

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கருத்து கேட்பு கூட்டத்தில் வெளிமாநில செய்தியாளர்கள் புகுந்து கேள்வி கேட்டதால் பொதுமக்கள் ரகளை.

Update: 2021-10-18 16:45 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெளிமாநில செய்தியாளர்கள்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது புதிதாக பெருந்துறை சிட்கோ மையத்தில் அமையவுள்ள ஆலை விரிவாக்கம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஆகும். இதற்கு பொதுமக்கள் ஏற்கனவே பெருத்துறை சுற்றுசூழல் மாசு அடைந்து நிலத்தடி நீர் நிறம் மாறியுள்ளது. இங்கு கேன்சர் போன்ற நோய்களால் அவதி அடைந்து வரும் நிலையில் புதிதாக ஆலை விரிவாக்கப் பணிக்கு அரசு அனுமதி வழங்க கூடாது என்று பொதுமக்களிடம் புகார் எழுந்தது.

இந்த கூட்டத்தின் போது தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த நான்கு நபர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி உள்ளனர். பின்னர் அந்தப் பகுதியில் இருந்த பெருத்துறை மற்றும் ஈங்கூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்த நான்கு பேரையும் மறித்து நீங்கள் யார் என விபரம் கேட்டு கூச்சலிட்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த போலீசார் நான்கு பேரையும் பிடித்து விசாரனை நடத்தியபோது அவர்கள் அனைவரும் செய்தியாளர்கள் என்றும், அடையாள அட்டையை காட்டியுள்ளனர். இதற்கு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளிமாநில செய்தியாளர்களுக்கு இங்கு என்ன வேலை என்று ஆவேசம் அடைந்து தாக்க முயற்சித்தனர். ஆனால் போலீசார் நான்கு பேரையும் பத்திரமாக மீட்டு திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News