தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர் உயிரிழப்பு
தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர் உயிரிழந்தார். மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி;
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே எல்லை குமாரபாளையம் என்ற கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது தேனீக்கள் கொட்டியதால் பழனிச்சாமி (80) என்பவர், தேனீக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த குட்டையில் குதித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் தேனீக்கள் கொட்டிய 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள் 17 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.